பாஜக ஆதரவாளர் வீட்டில் பணம், பரிசுப் பொருட்கள் சிக்கின
தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸில் ரூ.4.5 கோடி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடந்து நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் கணேஷ் மணியின் வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கம், 100 வேஷ்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் சிக்கியுள்ளன.
Tags :