யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியது.

by Admin / 14-07-2024 12:44:55pm
  யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியது.

இம்சை அரசன் 23 -வது புலிகேசியும் படத்தை இயக்கிய சிம்பு தேவன் மாலி அண்ட் மான்வே மூவி மேக்கருடன் இணைந்து தயாரிக்கும் படம் போட். நகைச்சுவை நடிகராக வலம் வந்து ஒரு சில படங்களில் கதாநாயகனாக வளர்ந்த  யோகி பாபு இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் எம்.எஸ். பாஸ்கர், ஜென்னி ஜெயந், கௌரிகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.  படத்தினுடைய பஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. படம் முடிவடைகிற தருணத்தில் இருப்பதால் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளிவரும் என்று படம் தரப்பு தெரிவித்துள்ளது. /யோகி பாபு, தற்பொழுது மண்ணாங்கட்டி, சட்னி சாம்பார், ஜோரா கையத்தட்டுங்கள் முதலிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடந்த கதையை பின்னணியாக கொண்டுள்ளது, இப்படம்.

  யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியது.
 

Tags :

Share via