தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இன்று மழைக்கு வாய்ப்பு

by Editor / 16-03-2023 08:20:06am
தமிழ்நாட்டில்  ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இன்று மழைக்கு வாய்ப்பு

வட உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via
Logo