மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

மின்சாரம் பாய்ந்து, இன்ஜினியரிங் மாணவர் இறந்தார்.திருக்கழுக்குன்றம் அடுத்த, வீராபுரம் பகுதியைச் சேர்ந்த, ரமேஷ்குமார் மகன் பவித்ரன், மேல்மருவத்துார் தனியார் பொறியியல் கல்லுாரி பயின்று வருகிறார் இவர் வயலுக்கு நீர் பாய்ச்ச, மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் பாய்ந்து, அதே இடத்தில் இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :