திருநெல்வேலி  - பாலக்காடு "பாலருவி" எக்ஸ்பிரஸ் சுதந்திரத்தினத்தில் வஉசி மண் வரை நீடிப்பு.

by Editor / 13-08-2024 11:59:45pm
திருநெல்வேலி  - பாலக்காடு

நெல்லை சந்திப்பில் இருந்து தினமும் கேரள மாநிலம் பாலக்காடு வரை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுவரவுகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்துள்ளது.இதனைத்தொடர்ந்து இந்த ரயில் சேவையை வருகிற 15ஆம் தேதி பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். 

இந்நிலையில், தூத்துக்குடி - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்கனவே 14 பெட்டிகளோடு இயக்கப்பட்டுவரும் நிலையில் செங்கோட்டை-புனலூர் இடையே மின்பாதை இயக்கம் தொடங்கப்பட்டதால் இந்த ரயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி மற்றும் மூன்று பொது பெட்டிகள் இணைக்கப்படுகிறது. வண்டி எண்: 16791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை 14-08-2024 முதல் நான்கு பெட்டிகள் கூடுதலாக சேர்க்கப்படும். 

வண்டி எண்: 16792 பாலக்காடு - திருநல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் சுதந்திரத்தினத்தன்று 15-08-2024 முதல் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும். ஏற்கனவே 14 பெட்டிகளுடன் இயங்கிய நிலையில் இனி 18 பெட்டிகளுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் செங்கோட்டை-தென்காசி வழியாக தூத்துக்குடிக்கு பேரூந்து வசதி பல ஆண்டுகாலமாக கூட இல்லாமல் இருந்த நிலையில் தபோது இந்தரியில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வியபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வஉசி வாழ்ந்த  மண்ணை பெருமைப்படுத்தும் வண்ணம் மத்திய அரசு இந்த ரயில்சேவையை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி  - பாலக்காடு
 

Tags : திருநெல்வேலி  - பாலக்காடு "பாலருவி" எக்ஸ்பிரஸ் சுதந்திரத்தினத்தில் வஉசி மண் வரை நீடிப்பு.

Share via