பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து நகைகள் கொள்ளை.
மும்பை - நாகர்கோவில் ரயிலில், கடலூரைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மயக்கமடைந்த பெண்கள் மீட்க்கப்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேநீரில் மயக்கமருந்து கலந்து கொடுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சக பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து நகைகள் கொள்ளை