864 பூச்சி உருவங்களை பச்சை குத்திக் கொண்ட அதிசய மனிதர்

by Admin / 05-02-2022 12:11:12pm
 864 பூச்சி உருவங்களை பச்சை குத்திக் கொண்ட அதிசய மனிதர்

சிலந்திகள், தேள்கள், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் உருவங்களை உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்ட  அமெரிக்காவைச் சேர்ந்த மைக் அமோயாவை பற்றிய வீடியோ  இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியானது. 

கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியதாக 864 பூச்சிகளின் உருவங்களை தமது உடல் முழுவதும் அவர் பச்சை குத்தி கொள்ளும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது. 
 
இதில் சிலந்திகள், தேள்கள் என பெரிய வகை பூச்சி இனங்கள் இடம் பெற்றிருந்தாலும் அதை சேர்க்காமல் மூட்டை பூச்சி உள்பட 864 சிறிய பூச்சிகளின் உருவங்கள் அமோயா உடல் எங்கும் இடம் பெற்றுள்ளன. 

நான் பூச்சிகளை விரும்புகிறேன் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள் - உண்மையில் இது முற்றிலும் எதிர்மாறானது. நான் பூச்சிகளுக்கு பயப்படுகிறேன், 

நான் பூச்சிகளை வெறுக்கிறேன். அதனால்தான் நான் அவற்றை என் உடல் முழுவதும் வைத்தேன்  என்று அமோயா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வீடியோ கிளிப் பகிரப்பட்ட 16 மணி நேரத்தில் 33,000 க்கும் மேற்பட்டோரின் விருப்பங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 

 

Tags :

Share via

More stories

Logo