தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.

by Admin / 27-05-2026 02:34:29pm
 தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.

 இன்று சென்னையிலிருந்து தனி விமானத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார் பூங் கொத்துகொடுத்து வரவேற்றார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார், முதலமைச்சர். இன்று மாலை நாலு முப்பது மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான நிதி சார்ந்த விஷயங்களையும் திட்டங்கள் குறித்தும் பேச உள்ளார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்திக்கிறார். இன்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர் நாளை குடியரசு தலைவர் குடியரசுத் துணைத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அளிக்கும் விருந்திலும் பங்கே இருக்கிறார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ள திருவள்ளுவர் சிலையும் திறந்து வைக்க உள்ளதாக தகவல்.

 தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்தார்.
 

Tags :

Share via

More stories

Logo