மீண்டும் அதிமுக வலிமையான  தமிழக மூன்றாவது கட்சியாக வலுப்பெற்றுள்ளது.

by Admin / 27-05-2026 02:44:28pm
 மீண்டும் அதிமுக வலிமையான  தமிழக மூன்றாவது கட்சியாக வலுப்பெற்றுள்ளது.

அதிமுக இரு அணிகளாக பிரிந்து நின்ற எஸ்பி வேலுமணி சிவிசண்முகம் ஆதரவாக செயல்பட்ட 25 எம்.எல்.ஏக்களில் நான்கு எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு இணைந்துள்ளனர். மேலும், பல எம்.எ.ல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவருக்கு ஆதரவளித்தனர். .இதனால் எஸ்.பி. வேலுமணி, சி.பி. சண்முகம் அணியில் எம்.எல்.ஏக்களில் பழம் படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக இரு அணிகளும் பிளவுபட்டு நின்றால் எதிரிக்கு பலம் ஆகிவிடும் என்கிற நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் சிவி சண்முகம் சி விஜயபாஸ்கர், தேவன் மூவரைத் தவிர அனைவரும் சந்தித்து இணைத்துக் கொண்டனர். இந்நிலையில் சி விஜயபாஸ்கர் தாங்கள் அளித்த மனுவை திரும்ப பெரும் பொருட்டு தலைமைச் செயலகம் சென்று இருந்தார். சட்டப்பேரவை செயலகம் அறிவுறுத்தியதின் அடிப்படையில் அனைத்து எம்எல்ஏக்களும் சபாநாதரை சந்தித்து இருதரப்பிலும் கொடுக்கப்பட்ட மனுக்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதின் காரணமாக அனைவரும் அங்கு இருந்து சட்டமன்ற பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரை சந்தித்து தங்கள் கோரிக்கையை தெரிவிக்க அவரும் அவர்கள் அளித்த மனுவை திரும்ப அளித்தார். அதனால் இப்பொழுது அதிமுக பலம் 42 ஆக உயர்ந்துள்ளது. சி. வி .சண்முகம் நேரில் வராததனால் ஒரு எண்ணிக்கை குறைந்த நிலையில் அது குறித்தான தகவலும் வெளியானது அவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை அதிமுக குழு தலைவராக தொடர்வார் என்பதற்கு ஆதரவாக கையெழுத்திட்டு உள்ளார் என்கிற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்திய அதிமுக தோல்வியை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பம் தெளிவடைந்து  மீண்டும் அதிமுக வலிமையான  தமிழக மூன்றாவது கட்சியாக வலுப்பெற்றுள்ளது. சி.வி சண்முகம் மற்றும் இன்னும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via

More stories

Logo