வரி நிலுவை உள்ள ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும்.

தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சோதனையின்போது வரி நிலுவை உள்ள ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியது: “ போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உரிமையாளர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.எனினும், அதிக கட்டணம் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட அதிக தொகையை திருப்பிச் செலுத்த அறிவுறுத்தி வருகிறோம். வெளி மாநில பேருந்துகள் தமிழக அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகளால் பேருந்து நிலையங்களிலும், வழித்தடத்திலும் மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, வரி பேருந்துகளுக்கு செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்து சிறைபிடிக்கப்படும்.எனவே, பயணிகள் தங்கள் பயணிக்க இருக்கும் பேருந்தின் உரிமம், வரி, தகுதிச்சான்று போன்றவை சரியாக இருக்கிறதா என நிர்வாக தரப்பினரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Tags : தனியார் பேரூந்துக்கள் தீடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும்.