இடி மின்னலுடன் கனமழை..வருது..கவனம்.

by Editor / 03-07-2023 09:58:12am
இடி மின்னலுடன் கனமழை..வருது..கவனம்.

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். திருப்பூர் திண்டுக்கல் தேனி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 - 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கக்கூடும்.என்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via