மத்திய அரசை கண்டித்து நவ. 15-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

by Staff / 07-11-2023 03:01:04pm
மத்திய அரசை கண்டித்து நவ. 15-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற நவம்பர் 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 2005-ல் நிறைவேற்றப்பட்டு கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில்தான் இத்தகைய விரிவான திட்டம் செயலுக்குக் கொண்டு வரப்பட்டது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பெரும்பாலும் பயனடைந்தவர்கள் பெண்களும், பட்டியலின மக்களும் ஆவார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo