யூடியூப் பார்த்து குண்டு தயாரித்த குற்றவாளி

by Staff / 30-10-2023 01:11:02pm
யூடியூப் பார்த்து குண்டு தயாரித்த குற்றவாளி

கேரளாவின் கொச்சியில் கிறிஸ்தவ தேவாலய கூட்டு நிகழ்ச்சியில் நேற்று காலை டிபன் பாக்ஸ் குண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் ஜெப கூட்டத்தில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு காரணமான டொமினிக் மார்ட்டின் தானாக முன்வந்து சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் யூடியூப் பார்த்து குண்டு தயாரிக்க கற்றுக்கொண்டுள்ளதாக மார்ட்டின் கூறியுள்ளார். இதற்காக ரூ.3,000 மட்டுமே செலவிட்டதாக கூறியுள்ளார். மேலும், ஜெப கூட்டத்தில் தனது மாமியார் பங்கேற்றும் தனது முடிவில் பின்வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo