அல்லு அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த அட்லீ

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுனை வைத்து இயக்குனர் அட்லீ படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்றும், அதில் கிடைக்கும் லாபத்தில் தனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறாராம் அட்லி. இதுதான் அல்லு அர்ஜூன் மற்றும் தயாரிப்புத் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. வழக்கமாக பெரிய ஹீரோக்கள்தான் படத்தின் லாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பே நிச்சயம் ஹிட்டாகும் என அடித்துச் சொல்லி லாபத்தில் பங்கு கேட்டிருக்கும் அட்லியின் இந்த செயல் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறதாம்
Tags :