மதுரை மாவட்ட காவல் துறையின் நடவடிக்கையால் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் தகவல்.

by Editor / 31-12-2021 11:32:19pm
மதுரை மாவட்ட காவல் துறையின்  நடவடிக்கையால்   குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் தகவல்.

இந்த ஆண்டு இதுவரை 63 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 162 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2020-ம் ஆண்டு 67 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 232 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

 கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 4 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.
குண்டர் தடுப்பு சட்டம்
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதை கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 7 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேர், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்டவர்கள்-18 பேர், திருட்டு, வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் -7 பேர் உட்பட மொத்தம் 34 பேர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 2020-ம் ஆண்டு 32 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு பேர் கூடுதலாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள்
இந்த ஆண்டு இதுவரை கூட்டுக் கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 709 வழக்குகளில் 444 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 938 எதிரிகளை கைது செய்து 2,10,68,763 (ரூபாய் இரண்டு கோடி பத்து லட்சத்தி அறுபத்தி எட்டாயிரத்தி எழு நூற்று அறுபத்து மூன்று) ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு அறிக்கையான திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 63% வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு அறிக்கையான திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 43 % வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 20% அதிகமான வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via