மாதம் ரூ.1000 - கருணாநிதி பிறந்த நாளில் தொடங்க திட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அளித்த மிக முக்கிய வாக்குறுதிகளில் புதுமைப்பெண் திட்டம், மகளிர் இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், வரும், ஜூன் மாதம் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளில், ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :