10 ஆண்டுகளாக காதலித்த ஆசிரிய காதலிகத்தியால் குத்தி கொலை. காதலன்காவல் நிலையத்தில் சரண்.

by Admin / 28-11-2025 02:40:03am
10 ஆண்டுகளாக காதலித்த ஆசிரிய காதலிகத்தியால் குத்தி கொலை. காதலன்காவல் நிலையத்தில் சரண்.

தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு மறுத்த தற்காலிக ஆசிரியை காவியாவை அவரது காதலன் அஜித்குமார் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே மேல களக்கூடிய சேர்ந்த காவியா இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காவியாவின் பெற்றோர்களிடம் மகளை திருமணம் செய்து கொடுக்க கேட்ட பொழுது அவர்கள் மறுத்துள்ளனர் .பின்பு பெற்றோர் வற்புறுத்தலால் காவியா வேறொரு மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்து ,சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.. இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை அஜித்குமாருக்கு காவியா அனுப்பி உள்ளார்.. இதனால் கோபமடைந்த அஜித்குமார் காலை பள்ளிக்கு சென்ற காவியாவை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளார்.. இச்சம்பவத்திற்கு பிறகு அஜித்குமார் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.. பட்டப் பகலில் நடந்த கொடூர சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via