ரெட் அலர்ட்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை
டெல்லி வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உத்தரகண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் இன்று (ஜூலை 14) அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உத்தரப்பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், மகாராஷ்டிராவுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :



















