டெல்லி செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, மாநிலத்திற்கு SSA (Samagra Shiksha Abhiyan) திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்த உள்ளார். மேலும், கல்வித்துறையின் வளர்ச்சிக்காக இந்த நிதி அவசியமானது என்பதைக் கூறி, நேரில் மனுவும் வழங்கப்பட உள்ளது.
Tags :