கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

by Staff / 12-11-2022 11:03:17am
 கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த லிங்கநாயக்கன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தர்மதுரை. இவரின் மனைவி பிரபாவதி. கோவிந்தராஜ் என்பவருக்கும் பிரபாவதிக்கும் தகாத உறவு ஏற்பட்டிருக்கிறது. இது தெரிய வந்ததும் தர்மதுரை, மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரபாவதி கள்ளக்காதலன் கோவிந்தராஜுடன் சேர்ந்து கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தர்மதுரையை தோசை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், கோவிந்தராஜுடன் சேர்ந்து தர்மதுரையின் உடலை காரில் எடுத்துச் சென்று சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி -வீரபாண்டி இடையே இருக்கும் ரயில்வே தண்டவா லத்தில் உடலை வீசி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வேறொரு வழக்கில் கோவிந்தராஜ் கைதானார். அப்போது தர்மதுரையை அவரது மனைவியுடன் சேர்ந்து தோசைக்கல்லால் அடித்து கொலை செய்ததை போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் கோவிந்தராஜ்- பிரபாவதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo