இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை -பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுராந்தகம் தாராபுரம் ஆகிய சட்ட பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் ஆறாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வு முடிவில் எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Tags :


















