குடியுரிமை திருத்தச் சட்டம் - நிலைப்பாட்டை மாற்றிய பாமக

by Staff / 14-02-2024 03:21:26pm
குடியுரிமை திருத்தச் சட்டம் - நிலைப்பாட்டை மாற்றிய பாமக

குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு நிலைப்பாட்டை பாமக தற்போது மாற்றிக் கொண்டுள்ளது. இதுபற்றி பேசிய அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்திருந்தாலும், மக்கள் நலனை பாதிக்கும் இச்சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படகூடாது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனை நல்லதாக இருந்தாலும், அதை முழுமையாகச் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via