பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே" - தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.

by Editor / 21-04-2025 11:06:59pm
 பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில் போராட்டமானது 1,000-வது நாளை எட்டியது. இதை சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக 1000 நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே" என்றார்.

 

Tags : தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.

Share via