500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல்

by Staff / 05-06-2023 04:43:11pm
500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல்

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாரானதும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 5329 மதுக்கடைகள் உள்ள நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via