ராட்டினம் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி.

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் Disco break என்னும் ராட்டினத்தின் ஒரு தூண் சாய்ந்த நிலையில் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்ட உப்பார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார்(32)என்பவரின் மீது மின்சாரம் பாய்ந்தது.
வீரபாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : The young man was killed by an electric shock while setting the wheel.