விஜய்க்கு கடிதம் எழுதி விட்டு இளைஞர் தற்கொலை

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். அந்த கடிதத்தில், “நான் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கேட்டு அதிகளவில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால், என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இது என்னுடைய மரண வாக்குமூலம்” என உருக்கமாக எழுதி உள்ளார்.
Tags :