தாய்,தந்தையரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து உயர் கல்வி வரை உதவி வழங்க அரசு நடவடிக்கை.

by Editor / 27-03-2023 11:21:49am
தாய்,தந்தையரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து உயர் கல்வி வரை  உதவி வழங்க அரசு நடவடிக்கை.

புதுச்சேரி சட்டப்பேரவையின் 13-வது நாள் கூட்டம்  தொடங்கி நடைபெற்று வருகிறது.உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இன்று வினா விடை மற்றும் மானிய கோரிக்கைக்கள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.ராகுல்காந்தி பதவி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்திநாதன் கருப்பு சட்டை அணிந்து பேரவையில் பங்கேற்று உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் எந்த காரணத்தாலும் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பை அரசே ஏற்றுக்கொள்கின்றது. தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும் அவர்களுக்கு கல்வி கட்டணம் கேட்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. என உறுப்பினர்கள் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேரவையில் அறிவிப்பு.தாய்,தந்தையரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து உயர்கல்வி வரை  உதவி  வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர்  உறுதி.
 

 

Tags :

Share via