தென்காசியில் இரண்டு நீதிமன்றங்கள் திறப்பு விழா உயர்நீதிமன்ற நீதிபதி,சட்ட அமைச்சர் பங்கேற்பு.

by Editor / 13-01-2024 11:04:11pm
தென்காசியில் இரண்டு நீதிமன்றங்கள் திறப்பு விழா உயர்நீதிமன்ற நீதிபதி,சட்ட அமைச்சர் பங்கேற்பு.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் 2019 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உதயமானது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட அலுவலகங்கள் தென்காசியில் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே கூடுதல் மாவட்ட நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஆகிய நான்கு நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் எதிர்புறம் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்கள் உள்ளிட்ட ஆறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம்  ஆகிய இரண்டு நீதிமன்றங்கள் தென்காசியில் செயல்பட வேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தென்காசி திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதியதாக மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் துவக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்களில் துவக்க விழா குற்றாலம் இலஞ்சி சாலையில் உள்ள காசிமேஜபுரம் முருகன் மஹால் என்கின்ற திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதனை சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் சுரேஷ்குமார் மற்றும் இளங்கோவன் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். 

 

Tags : தென்காசியில் இரண்டு நீதிமன்றங்கள் திறப்பு விழா உயர்நீதிமன்ற நீதிபதி,சட்ட அமைச்சர் பங்கேற்பு.

Share via