கடையத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி

தென்காசி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரு (6,7) தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ரவி நேற்றைய தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, இது தொடர்பான பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.
அங்கிருந்து நேற்றிரவு தென்காசி மாவட்டம் கடையத்திலுள்ள சோகோ நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு வீட்டில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று காலை கடையத்து மருமகனான பாரதியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கடையம் செல்லம்மாள் பாரதி நூலகத்தில் உள்ள பாரதியார் செல்லம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நூலகத்தையும் பார்வையிட்டு தற்போது தருவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
Tags : கடையத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி