பொதுத்தேர்வு:மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மாணவர்கள், கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம். படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள். தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம். தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றிப் பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்” என தெரிவித்துள்ளார்.
Tags : பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து