பிரபல புல்லட் திருடர்கள் கைது 9 புல்லட் உட்பட 11 டூவீலர்கள் பறிமுதல்.

by Editor / 02-03-2025 10:29:03pm
பிரபல புல்லட் திருடர்கள் கைது 9 புல்லட் உட்பட 11 டூவீலர்கள் பறிமுதல்.

திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களாக குறிப்பாக புல்லட் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடு போனது இது தொடர்பாக நகர் மேற்கு, தாலுகா, வேடசந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி ஆகியோர் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ஹரிஹரன்(23), பிரசாந்த்(19) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 9 புல்லட், 1 கேடிஎம் பைக், 1 splendor பைக் ஆகிய 11  இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags : பிரபல புல்லட் திருடர்கள் கைது 9 புல்லட் உட்பட 11 டூவீலர்கள் பறிமுதல்

Share via