சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

by Staff / 10-01-2024 12:30:52pm
சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம்புரண்டது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட சார்மினார் ரயில் இன்று காலை கடைசி நிறுத்தமான ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் சென்றடைந்தது. அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரயில் நிற்காமல் சற்று முன்னேறியதால் ரயில் நிலையத்தில் சுவற்றில் மோதி 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via