மனதைக்கொள்ளை கொள்ளும் கொடைக்கானல் சீசன் தொடக்கம்
கொடைக்கானலில் இளம்தம்பதிகளை ஈர்க்கும் குளிர்கால சீசன் தொடங்கியுள்ளது.கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைமுகடுகளை தழுவும் மேகங்களையும், மாலை வெயிலை அனுபவித்து உற்சாகம் அடைகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுலாத்தலம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு மோயர் பாயின்ட், பில்லர் ராக், நட்சத்திர ஏரி என பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. சீசன் காலங்களில் வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர் கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ளதால் அந்தப்பகுதிமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags :