தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்மழைக்கு வாய்ப்பு

by Editor / 09-02-2024 12:26:39am
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், பிப். 9ம் தேதி கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும். உள்தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Share via

More stories