பாரதிராஜா- தமிழ் திரை உலகில் 80 க்கு பின்னார் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியவர்.
தமிழ் திரை உலகில் 80 க்கு பின்னார் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியவர். கிராமத்துப் பின்னணியில் வாழும் மக்களினுடைய வாழ்வியலை மிக எளிய முறையில் வடக் காட்சிகளாக தந்தவர்கள்.
பல இயக்குனர்களுக்கு நடிகை- நடிகர்களுக்கு கவிஞர்களுக்கு பாடகர்களுக்கு இசை அமைப்பாளர்களுக்கு புதிய வாழ்க்கை தொடங்குவதற்கு வழி கோலியவர் . கிராமத்து மண் வாசனையை தனித்துவத்துடன் வெளிப்படுத்தியவர்.
கன்னட இயக்குனர் புட்டண்ணாவின் உதவியாளராக இருந்து பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட இயக்குனர்.
சத்தியஜித்ரே போன்ற மாபெரும் இயக்குனரோடு ஒப்பிடத்தக்க கூடிய நிலையில் உயர்த்தி பார்க்கப்பட்டவர். வெறும் கிராமத்து படங்களை மட்டுமே இயக்குபவர் என்கிற கருத்தாக்கத்தை உடைத்து டிக் டிக் டிக் என்கிற படத்தின் மூலம் க்ரைம் கதைகளையும் இயக்கக்கூடிய ஆற்றல் உண்டு என்பதை வெளிப்படுத்தியவர்.
இன்றைக்கு பல்வேறு திரைத்துறையில் முன்னணியாக இருப்பவர்களுக்கு முகமாக இருந்த அவர் தம் மகன் இறப்பிற்கு பின் மிகுந்த மனவலிமையும் உடல் வலிமையும் குன்றியவராக இருந்தார். 84 வயதான அவர் உடல் தளர்வின் காரணமாக இன்று இயற்கை எய்தினார்
.தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஆன மு க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னேற்ற அரசியல் ஆளுமைகளும் திரை ஆளுமைகளும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் ;செலுத்தி வருகின்றனர்.
Tags :


















