நடிகர் சிவாஜி கணேசன் மகன், பேரனுக்கு நோட்டீஸ்
'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய ரூ.4 கோடியை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துஷ்யந்தின் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் 'ஜகஜால கில்லாடி' என்கிற படத்தை தயாரிப்பதற்கு கடன் வழங்கக்கோரி தனபாக்கியம் நிறுவனத்தை அணுகினர். ரூ.4 கோடி கடன் பெற்ற நிலையில் அதனை திரும்ப செலுத்த தாமதித்து வந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து துஷ்யந்த், அபிராமி மற்றும் ராம்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
Tags :