இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா நற்செய்தி

by Staff / 10-03-2023 11:41:09am
இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா நற்செய்தி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள டீக்கின் பல்கலைக்கழக கிளை இந்தியாவில் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். இரு நாட்டு மாணவர்களும் பயன்பெறும் வகையில் 'ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி அங்கீகார பொறிமுறை' அமைக்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் குழுவுடன் அல்பானீஸ் புதன்கிழமை இந்தியா வந்தார். இந்த பயணத்தின் போது இந்தியா-ஆஸ்திரேலியா தலைவர்கள் கூட்டாண்மையின் கீழ் பல்வேறு முன்முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்தார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo