கார் விபத்தில் சிக்கிய ராஜ்சபா எம்.பி.,

by Staff / 24-04-2023 12:54:16pm
கார் விபத்தில் சிக்கிய ராஜ்சபா எம்.பி.,

ராஜ்யசபா எம்பி கார்த்திகேய சர்மா சாலை விபத்தில் சிக்கினார். ஹரியானா மாநிலம் பிலாஸ்பூர் அருகே அவர் சென்ற கார் மீது பின்னால் இருந்து லாரி மோதியது. இந்த விபத்தில் எம்.பி., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவரது தனிப்பட்ட ஊழியர்கள் காயம் அடைந்தனர். தாத்ரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரா கிராமத்தில் இருந்து குருகிராமுக்கு கார்த்திகேய சர்மா சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo