தென்காசிமாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை - குளம் உடைந்து தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்த வெள்ளம்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தையும் - கேரளாவையும் இணைக்கும் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, செங்கோட்டை பகுதியில் தஞ்சாவூர் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் வெள்ளமானது பாய்ந்தோடி வருவதால் அந்த பகுதியில் தற்போது தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ள நிலையில், அந்த வழியாக வாகனங்களை செல்ல விடாதவாறு அறிவுறுத்தல் செய்து வருகின்றனர்.
மேலும், சாலைகளில் ஆங்காங்கே சிக்கிக்கொண்ட வாகனங்களையும் மீட்கும் முயற்சியில் தற்போது தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இந்த வரலாறு காணாத மழையின் காரணமாக தென்காசி மாவட்ட மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன.