டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

by Staff / 31-05-2022 04:08:29pm
டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் மாற்று  பாதையில் திருப்பி விடப்பட்டன டெல்லியில் கனமழை இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via