தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு
60 வயது பூர்த்தியான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். இதில் ஆசிரியர்கள் 2,000 பேர், அரசு பணியாளர்கள் 23,000 பேர் ஆவர். இதன் மூலம் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘தமிழகத்தில் அரசு துறைகளில், 14 லட்சம் முதல் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒன்பது லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர். நிறைய இடங்கள் காலியாக உள்ளன; அவற்றை நிரப்ப போதுமான நிதி இல்லை’ என்று கூறியிருந்தார்.
அவரது கூற்றுப்படி தற்போது தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















