13 பிராந்திய மொழிகளில் SSC தேர்வுகள்

by Staff / 21-01-2023 11:18:48am
13 பிராந்திய மொழிகளில் SSC தேர்வுகள்

பணியாளர் தேர்வாணையம் (SSC) தேர்வை மேலும் 13 பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்)-2022 தேர்விலிருந்தே இது செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கொங்கனி, மணிப்பூரி, மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நடப்பு ஆண்டில் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுமார் 11 ஆயிரம் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், ஹவல்தார் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via