உண்ணாவிரதம் இருந்ததால் 47பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மதக்குருக்களின் பேச்சைக் கேட்டு உண்ணாவிரதம் இருந்ததால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் கில்பி மாகாணத்தில் கிறுஸ்துவ பிரிவைச் சேர்ந்த சில மதக்குருக்கள், ஏசு கிறிஸ்துவை பார்க்க அழைத்துச்செல்வதாகவும், இதற்காக பல நாட்கள் உண்ணாவிரதமிருக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால், ஏராளமான மக்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இந்நிலையில், பட்டினியால் பலரும் உயிரிழந்துள்ளதுடன், அனைவருமே ஆழமற்ற புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்த 47பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மத கூடங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :