இங்கிலாந்தில், மாணவர்களுக்கு 18 வயது வரை கணித பாடம் கட்டாயம்

by Staff / 05-01-2023 01:14:17pm
 இங்கிலாந்தில், மாணவர்களுக்கு 18 வயது வரை கணித பாடம் கட்டாயம்

இங்கிலாந்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், மருத்துவ சேவையில் நெருக்கடி, சம்பளத்தை உயர்த்தக் கோரி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது போன்ற பிரச்னைகள் பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை ஆட்டிப்படைக்கிறது. இந்த உத்தரவில், நாட்டில் நீண்ட கால பிரச்னைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிகிறது. இங்கிலாந்தில், மாணவர்களுக்கு 18 வயது வரை கணிதக் கல்வி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது, அவர்களின் எதிர்கால தொழில் தேவைகளை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Tags :

Share via