தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும்.

by Admin / 10-10-2025 06:10:49pm
தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும்.

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை மண்டலவானிலை மையம் அறிவித்துள்ளது..

சென்னை உள்பட பிற பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நீலகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும். 

ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அல்லது ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ராணிப்பேட்டை, தென்காசி கரூர் மற்றும் நாமக்கல் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

. சென்னையைப் பொறுத்தவரை என்று வெள்ளிக்கிழமை, சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடியுடன் கூடிய மழை அல்லது மின்னலுடன் கூடிய ஒன்று அல்லது இரண்டு முறை லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை சனிக்கிழமை அக்டோபர் 11ஆம் தேதி இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் லேசான காற்று வீசும் என்றும் முன் அறிவிக்கப்பட்டுள்ளது .. ஞாயிற்றுக்கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறிப்பாக, மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் கன மழைக்கான முன்னறிவிப்பு உள்ளதாகவும் மாநிலம் முழுவதும் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை உள்ளது என்றும் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via