கார் ஒர்க் ஷாப்பில் வெடி விபத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மூலச்சத்திரம் அருகே ரூபன் என்பவர் ரிச்சி கார்ஸ் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார்,அந்த ஒர்க் ஷாப்பை நடத்த முடியாத காரணத்தால் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முஸ்தாக் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் முஸ்தாக் அந்த கார் ஒர்க் ஷாப்பில் வைத்து பாறைகளை வெடிக்கும் வெடி பொருள்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு ஒர்க்ஷாப்பில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது.இதை வந்தவழியே சென்ற நபர்கள் அங்கு கார் ஒர்க் ஷாப் போர்டில் இருந்த செல் நம்பரை பார்த்து ரூபனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்பின் அங்கு வந்த ரூபன் மற்றும் முஸ்தாக் ரியாஸ் ஆகியோர் வெடித்து முடிந்து மல மலவென தீப்பற்றிக் கொண்டிருந்த ஒர்க் ஷாப்பை பார்த்தவுடன் இவர்களோடு வந்த முஸ்தாக் உறவினரான ரியாஸ் முஸ்தாக் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை வெளியே எடுப்பதற்காக முயற்சி செய்து உள்ளார் அப்போது அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த வெடி சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த குடியிருப்புவாசிகளை கதவைத் தட்டி ஓடிவிடுங்கள் என்று சொல்லி அவர்களை அங்கருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.இந்தநிலையில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்துவந்து தீயை அணைத்துள்ளனர்.
அதன்பின் இன்று காலை மாவட்ட எஸ்பி பிரதீப் வந்து நேரில் ஆய்வு சென்று சென்றார் அதனைத் தொடர்ந்து தற்போது திண்டுக்கல்லில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவைசேர்ந்த தர்மராஜ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு இந்த வெடிபொருளின் தன்மை என்ன இது வெடிப்பதற்கான காரணம் என்பதை குறித்து ஆய்வு செய்து அதற்கான மூலப் பொருட்களை சேகரித்தனர்.
Tags : கார் ஒர்க் ஷாப்பில் வெடி விபத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு.