மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு தேர்வு குறித்து அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளது இது தொடர்பான அறிவிப்பு பள்ளியின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதன்படி மாணவர்களின் கல்வி நலன் கருதி நியாயமான தேர்வை நடத்துவது அவசியம் என்றும் ஒரு விரிவான நியாயமற்ற வழிமுறைகள் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் வகுக்கப்பட்டுள்ளது தேர்வு தொடங்க முன் தேர்வு எழுத அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு களின் நெறிமுறைகள் அவற்றின் விதிகள் மற்றும் சிபிஎஸ்இ வழங்கும் அறிவுறுத்தல்கள் குறித்து தெரிந்து கொள்வது விரும்பத்தக்கது அதன்படி பரீட்சை நெறிமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தண்டனைகள் பற்றிய சுருக்கமாக மாணவர்கள் கூடுதலாக தேர்வுகளை சுகமாக நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வதந்திகளை நம்பவோ அல்லது பரப்புவோ வேண்டாம் என்றும் நெறிமுறைகள் மற்றும் அபராதங்கள் பற்றி சுருக்கமாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதையும் தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதி செய்ய தேர்வு நடைபெறும் நாளில் மாணவர்களுக்கு நினைவூட்டப்பட வேண்டும் என்றும் சுருக்கமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை பற்றி கடமைகளைப் பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளன மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிமுறைகள் அதாவது விதிகளுடன் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்வு மையத்திற்கு அனுமதி அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதோடு அனுமதி அட்டை மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை, இது தனி யார் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள், பை, பென்சில் பாக்ஸ், நீல மை, பால்பாயின் பேனா, ஜெல் பேனா, ஸ்கை ரைட்டிங் பேட், அளிப்பான் அனலாக் வாட்ச், தண்ணீர் பாட்டில், போக்குவரத்துக்கான மெட்ரோ கார்ட், பஸ் பாஸ், கையிருப்பு பணம் இவைகளை எடுத்துச் செல்லலாம் என்றும் எழுது பொருள்கள், உரை பொருட்கள், காகித துண்டுகள், கால்குலேட்டர்கள், பென் டிரைவுகள், பதிவு அட்டவணைகள், மின்னணு பேனாக்கள் ஸ்கேனர்கள் தொடர்பு சாதனங்கள், மொபைல் போன்கள், ப்ளூடூத் சாதனங்கள், இயர் ஃபோன்கள், மைக்ரோ போன்கள் ,பேச்சர்கள் ,ஹெல்த் பேண்டுகள் ,ஸ்மார்ட் வாட்ச் கள், கேமராக்கள், பணப்பை, கண்ணாடிகள், உணவுப் பொருள்கள் இவை போன்ற தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படாத எந்த பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் நியாயமற்ற வழிமுறைகளை எதுவும் பின்பற்றக் கூடாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :