திருநங்கைகளும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்-விரைவில் அறிவிப்பு.அமைச்சர் கீதா ஜீவன்..

by Editor / 01-10-2023 11:46:08pm
திருநங்கைகளும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்-விரைவில் அறிவிப்பு.அமைச்சர் கீதா ஜீவன்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்  திமுக மகளிர் தொண்டர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை விரைவில் முதல்வர் அறிவிக்க உள்ளார். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,போக்ஸோ  சட்டத்தினை தமிழக அரசு கடுமையாக செயல்படுத்தி வருகிறது என்றும், 18 வயதுக்கு குறைவான காதலர்களின்திருமணத்தின்போது  அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,போக்ஸோ,சட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சனை எழுகிறது என்றார். தொடர்ந்து,
சட்டசபையில் முதல்வர் அறிவித்தப்படி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய்,  தேவை உள்ள மகளிர் அனைவருக்கும் வழங்க வேண்டும்  என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம் என்றஅவர்,
தகுதி உள்ள,  தேவை உள்ள, அனைவரும் வரும் 12ஆம் தேதி வரை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார். மேலும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேருக்கு முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

 

Tags : திருநங்கைகளும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

Share via