கைதியை இருசக்கரவாகனத்தில் ஏற்றி சென்ற சேலம் மத்திய சிறை வார்டன் டிஸ்மிஸ்

by Editor / 01-10-2023 11:50:47pm
கைதியை இருசக்கரவாகனத்தில் ஏற்றி சென்ற சேலம் மத்திய சிறை வார்டன் டிஸ்மிஸ்

சேலம் மத்திய சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை பெற்ற சென்னையை   சேர்ந்த ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் அடைக்கப்பட்டு இருந்தார்.இவர் பரோலில் சென்னை சென்றார்.மீண்டும் இவர் விடுமுறை முடிந்து சேலம் மத்திய சிறைக்கு வந்த பிறகு மாயமானார்.இது குறித்து சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் விசாரணை செய்தார். 
பின்னர் சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சிறை வார்டன் ராமகிருஷ்ணன் என்பவர் கைதி ஹரிகிருஷ்ணனை இரண்டு சக்கர வாகனத்தில் அமர வைத்து வெளியில் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது.பின்னர் சிறை வார்டன் ஹிரிகிருஷ்ணனிடம் சிறைத்துறை  அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ராமகிருஷ்ணன் தனது இரண்டு சக்கர வாகனத்தில் கைதி ஹரிகிருஷ்ணனை இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் புதிய பேருந்து நிலையம் அழைத்து சென்று விட்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது .
இதனையடுத்து தமிழக சிறைத்துறை அதிகாரிகள்  விசாரணை செய்து சேலம் மத்திய சிறை வார்டன் ராமகிருஷ்ணனை டிஸ்மிஸ் செய்து  உத்தரவிட்டனர்.

 

Tags : கைதியை இருசக்கரவாகனத்தில் ஏற்றி சென்ற சேலம் மத்திய சிறை வார்டன் டிஸ்மிஸ்

Share via

More stories

Logo