தமிழகத்தில் பாமக ஆட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை

by Staff / 10-10-2022 05:13:12pm
 தமிழகத்தில் பாமக ஆட்சி  தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நெல்லி தோப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்தார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது, விழுப்புரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆனால் டாஸ்மாக் விற்பனையில் முதன்மை மாவட்டமாக வழங்கி வருகிறது. திண்டிவனத்தில் மகளிர் கலைக் கல்லூரி நீண்ட நாள் கோரிக்கையாகும். மயிலம் சட்டமன்ற தொகுதியில் ஒரு பேரூர் கூட கிடையாது அனைத்தும் ஊராட்சியே கிராமங்களை கொண்ட இப்பகுதி முன்னேற்றம் அடைய வேண்டும். தென்பெண்ணையாற்றில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் தடுப்பணைகள் அமைத்து நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்முறை படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் ஆகிய இரு மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த நந்தன் கால்வாய் திட்டமானது கடந்த கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் எடப்பாடி ஆட்சி காலத்திலும் தற்காலிக முதல்வராக உள்ள ஓபிஎஸ் ஆட்சி காலத்திலும் அறிவிக்கப்பட்டதுடன் நின்று விட்டது. இந்த மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். முலாய்சிங் யாதவின் மறைவிற்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் இந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்ப்பதாக கூறினார். கடலூர் மாவட்டத்தில் தங்களது கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார். சமீப காலமாக அமைச்சர்களின் பேச்சுக்கு நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரின் கண்டிப்பான பேச்சை தொடர்ந்து இனிவரும் காலங்களில் இது போன்று அமைச்சர்கள் பேச மாட்டார்கள் என்று தெரிவித்தார். 2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான தமிழகத்தில் ஆட்சி இருக்கும் அதற்காக 2024ல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tags :

Share via